அணியில் இடமில்லை! தோனியின் நிலைமை மிகவும் கவலைக்கிடம்!

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், டி20 போட்டிகளில் தோனியை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தயக்கம் காட்டி வருகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளை விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் மோசமான தோல்வியை கண்டது. 2-வது போட்டி நாளை துவங்க உள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றார். சமீப காலமாக தோனி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் தேர்வுக் குழு தோனியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் உள்ளது.

முன்பு தோனி போட்டியை முடித்து வைக்கும் வல்லமை கொண்டவராக திகழ்ந்தார். தோனி களத்தில் இருந்தால் எத்தனைப் பெரிய இலக்காக இருந்தாலும் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது தோனி பேட்டிங்கில் திணறி வருவதால் கோலிக்கு கூடுதல் பாரம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தோனிக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் விளையாட வைக்க ஆலோசிக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.