அதிர்ச்சி செய்தி! ஆசிரியராக மாறிய பிரபல நடிகை!

பள்ளியை தத்தெடுத்ததோடு அதில் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார் பிரபல நடிகை பிரணீதா.

நடிகை பிரணீதா கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். சமூக சேவைகளில் மிகவும் நாட்டம் கொண்ட இவர், ஒரு அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

2010-ல் போக்கிரி படத்தின் மூலம் கன்னடத் திரை உலகில் அறிமுகமானவர் பிரணீதா. தமிழில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘உதயன்’, ‘சகுனி’, ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமூக சேவைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிரணீதா. இவர் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்ததோடு பள்ளியின் தேவைகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளித்துள்ளார்.

மேலும் பிரணீதா வசிக்கும் ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிரணீதா 7-ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார். கோடி கோடியாய் சம்பாதிக்கும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருப்பது அரிதுதான்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: