அதிர்ச்சி! ஜாதியை வெளியிட்ட பிரபல தமிழ் நடிகை!

9e8f418cebe4af2c2385c7efd928f9e6

என்னுடைய ஜாதி ஒன்று தான் என்னுடைய திருமணத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது என்று பிரபல நடிகை பூர்ணா கூறியுள்ளார்.

நடிகை பூர்ணா கேரள மாநிலத்தை சேர்ந்தவர் இவர் மலையாள சினிமாவில் திரையுலகிற்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார்.

இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தை இயக்குனர் ராம் இயக்கியிருந்தார். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பூர்ண தன்னுடைய திருமண விஷயம் பற்றி தற்போது பேசியுள்ளார். ‘‘என் அம்மா என்னுடைய திருமணம் பற்றி தினந்தோறும் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இதில் ஜாதி தான் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதையும் தாண்டி திருமணம் பேச வருபவர்கள் நான் சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நானும் யாரையும் காதலிக்கவில்லை. என்னுடைய திருமணத்திற்கு நடிப்பும் ஜாதியும் தான் தடையாக இருக்கும் அதனால்தான் காலதாமதம் ஆகிறது. என்றார் பூர்ணா.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: