அம்பலமானது ஓபிஎஸ் திட்டம் அதிர்சியில் அதிமுக

அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் நேற்று தனியார் கொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 12ந்தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, டிடிவி தினகரனை முதல்வராக ஆக்குவது பற்றி பேசினார் என்று கூறி பரபரப்பை கிளிப்பினார்.

நேற்று திருச்சி விமான நிலையத்தில் இதைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, முதலில் தங்க தமிழ் செல்வன் பேட்டியை முழுவதும் கேட்கவில்லை, முழுமையாக கேட்ட பின் கருத்து கூறுகிறேன் என்றார். இதே கேள்வி மீண்டும் நிருபர்கள் கேட்டனர். அப்போது சென்னை சென்று பேட்டி அளிக்கிறேன் என்று ஓபிஎஸ் கூறினார். ஆனாலும் பீண்டும் இதே கேள்வி கேட்கப்பட்டது. இதனால் பொறுமையிழந்த ஓபிஎஸ் ” அதெல்லாம் ஒரு காலம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க ஓபிஎஸ் முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது. இதனால் அதிமுக கட்சியில் பிளவு ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.