“அழகை”அதிகப்படுத்த இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழலாம்.பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்

பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.நன்றாக பழுத்த பப்பாளிப் பழத்தை கூழ் போன்று பிசைந்து அதில் தேன் கலந்து முகத்தில் பூசினால் முகச் சுருக்கம நீங்கி முகம் பொலிவடையும்.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் உடல் எரிச்சல் புண் இருந்தால் பாப்பாளியை சாப்பிடுங்கள் .

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் , வைட்டமின் ஏ.சி மற்றும் ஈ இருக்கிறது .இத்தகைய அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: