அழியப்போகும் ஒரு மாமருந்து அதுவும் மனிதர்களாலே…

சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன் . பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் எண்ணிலடங்காதது ..

பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி கிடைக்கிறது. இயற்கையாக தயாரிக்கப்படுவதால் அதிக சத்துகளை கொண்டதாக உள்ளது.இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.

கருப்பட்டியில் உள்ள அதிக அளவிலான கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன் எலும்புகளுக்கு அதிக வலுவை கொடுக்கிறது.

வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து தயாரிக்கப்படும் களி சாப்பிடுவதால் இடுப்பெலும்பு வலுவடையும். மேலும் உடல் பளபளப்பாகவும், இரத்தத்தை சுத்திகரித்து உடல் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

• குப்பைமேனி இலையுடன் கருப்பட்டி சேர்த்து வதக்கி சாப்பிட்டால் நாள்பட்ட இருமல் மற்றும் நுரையீரலில் உள்ள சளி போன்றவை நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டி காபி குடிக்கலாம். கைக்குத்தல் அரிசியுடன் கருப்பட்டி கலந்து சாதம் தயாரித்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதோடு, சிறுநீர் அடிக்கடி வெளியேறுவதை தடுக்கலாம்.

ஆனால் இவ்வளவு நன்மைகள் கொண்ட கருப்பட்டியை விட்டுவிட்டு Slow Poison என்னும் சீனியையே உபயோகப்படுத்துகிறோம் , சிந்தித்து பாருங்கள் உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளின் நலனுக்காக கருப்பட்டியை உபயோகப்படுத்துங்கள்

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: