ஆசிய கோப்பை இந்தியா செய்த ஆச்சரிய சாதனைகள்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம். அப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 18ந் தேதி ஹாங்காங்கை எதிர்கொண்டாலும், இந்திய ரசிகர்களை பொறுத்த வரை செப்டம்பர் 19ந் தேதி நடைபெறும் பாகிஸ்தானுடன் நடக்கும் போட்டியே முதல் மற்றும் முக்கிய போட்டியாக கருதுகின்றன.

இதுவரை ஆறு முறை ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, 1988, 1990, I994 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்று சாதித்தது.

நீண்ட காலமாக இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வந்தாலும் இதுவரை இந்திய அணி வீரர்கள் ஒருவர் கூட டக் அவுட் ஆனது இல்லை.

ஆசிய கோப்பையில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் தோனி. தோனி தலைமையில் 13 போட்டியில் விளையாடிய இந்திய அணி, 9ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்தது.

ஆசிய கோப்பையில் இதுவரை அதிக பேட்டிங் ஆவ்ரேஜ் வைத்திருப்பவர் எம்.எஸ் தோனி. இவர் இதுவரை 13 போட்டியில் பேட் செய்து 571 ரன்களை குவித்துள்ளார். பேட்டிங் ஆவ்ரேஜ் 95.16.

ஒரு தொடரில் அதிக பேட்டிங் ஆவ்ரேஜ் வைத்திருப்பவர் விராட் கோலி. 2014 ஆம் ஆண்டு 3 போட்டிகளில் விளையாடி 357 ரன்களை குவித்தார். பேட்டிங் ஆவ்ரேஜ் 119.OO ஆகும்.

ஆசிய கோப்பை போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த 183 ரன்களே தனிநபர் அதிகபட்ச ரன் ஆகும்

1988 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷத் அய்யூப் என்ற இந்திய வீரர் எடுத்த 5 விக்கெட் மட்டுமே இந்தியாவால் ஆசிய கோப்பையில் பதிவு செய்யப்பட்ட ஒரே 5 விக்கெட் ஆகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.