சிவகார்த்தியின் தூக்கத்தை கெடுக்கும் சிம்ரனின் ரகசியங்கள்?

சீமராஜா படத்தில் சிம்ரன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சீமராஜா. படத்தை செப்டம்பர் மாதம் 13ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்நிலையில் சிம்ரனின் கதாபாத்திரம் குறித்து தெரிய வந்துள்ளது.

சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்துள்ளாராம். முக்கிய வில்லியே அவர் தானாம். ஹீரோயினாக நடித்த காலத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் சிம்ரன். அப்பவே அப்படி என்றால் தற்போது சொல்லவா வேண்டும்? சிம்ரன் வில்லியாக நடித்துள்ளது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஓபனிங் பாடல் வைத்துள்ளனர். வாரேன் வாரேன் சீமராஜா வழியை விடுங்கடா என்று மாஸ் பாடல் வெளியாகியுள்ளது. படத்தின் முழு ஆல்பமும் வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.