தமிழர்களால் கைவிடப்பட்ட மிகப்பெரிய இயற்கை மருத்துவம்..

மஞ்சள் பெண்களுக்கே உரியது. ஆனால் பெண்கள் அதை வேண்டாம் என்று ஒதுக்குவது தான் கசப்பான உண்மை .அதன் மருத்துவ குணங்களை கீழே விவரிக்றேன் .

மஞ்சள் தான் உலகிலேயே மிகப்பெரிய கிருமி நாசினி . தமிழர்கள் தான் மஞ்சளின் மகிமையை அறிந்து அதை உற்பத்தி செய்து வந்தனர் .ஆனால் இப்போது அதன் Copy Right நம்மிடம் இல்லை .. பெண்களுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினியாக பயனளிக்கிறது , முகத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிச்சனைகளுக்கும் மஞ்சள் தான் மிகச் சிறந்த மருத்துவம் .ஆனால் இன்றைய பெண்கள் TV ல் கட்டும் விளம்பரத்தை நம்பி அதனை பயன்படுத்தி இளமையிலேயே முதுமையாக காட்சியளிக்கின்றனர் .

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சளின் முக்கியத்துவம்.

உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

மஞ்சள் உடலுரம் தரும் , இரத்தத்தை சுத்தப்படுத்தும் , நீரிழிவு மற்றும் தொழு நோய்களை கட்டுப்படுத்த வல்லது ,குடற் பூச்சிகளை கொல்லும் அனைத்து சரும நோயையும் போக்கும்

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்,உடலுக்கு நிறத்தைக் கூட்டும்,மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

வேனல் கட்டி , விரல் சுற்றி, அடிபட்ட வீக்கம் , இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து சூடாக பத்துப் போட்டால் குணமாகும்

மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

கலப்படமில்லாத மஞ்சள் தூள் கிடைப்பது அரிது தான் .எனவே சுத்தமான மஞ்சள் எது என அறிந்து அதை வாங்கி பயன்படுத்துங்கள் பயனடையுங்கள்

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: