திடீர் அறிவிப்பு ஸ்ரீ தேவிக்கு கிடைத்த மாபெரும் மரியாதை

1980களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழ், இந்தி, கன்னடம் உள்பட பல மொரிகளில் நடித்துள்ளாளார். இந்தி படங்களில் நடக்க பாலிவுட் சென்ற இவர், அங்கு பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவருக்கு குஷி, ஜான்வி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் சென்ற வருடம் உறவினர் திருமணத்துக்கு துபாய் சென்ற போது அங்கு பாத்ரூம் டப்பில் மூழ்கி இறந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1989ஆம் ஆண்டு “சாந்தினி” என்ற படத்தில் ரிஷி கபூருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த படத்தை யாஷ் சோப்ரா நிறுவனம் தயாரித்தது. இந்த படம் முழுக்க முழுக்க சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் முழுவதும் சுவிட்சர்லாந்தை மிக அழகாக படம் பிடித்து மக்களுக்கு காட்டியது. மேலும் பல யாஷ் சோப்ரா நிறுவன படங்கள் சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

சுவிட்சர்லாந்து சிறந்த சுற்றுலா தலம் என்பதை தனது படங்கள் மூலம் உணர்த்தியதால் யஷ் சோப்ராவுக்கு கடந்த 2016ம் ஆண்டு அந்நாட்டில் சிலை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தாண்டு சாந்தினி படம் ஹிட்டாக காரணமாக இருந்த ஸ்ரீதேவிக்கு தற்போது சுவிட்சர்லாந்தில் சிலை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ரீதேவி இறந்து ஒரு வருடம் கழித்தும் சுவிட்சர்லாந்தில் சிலை வைத்து மரியாதை செய்வதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.