தோல்வியில் முடிந்த சபரிமலை தீர்ப்பு! திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள்..

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் தோல்வியை தழுவியது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரெகானா ஆகிய இரு பெண்களும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்ப சுவாமியின் சன்னிதானத்தை நெருங்கினர். அப்போது அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து கேரள அரசின் உத்தரவுப்படி அந்த இரண்டு பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து சபரிமலைக்கு பெண்கள் வருவதில் கோவில் நிர்வாகத்திற்க்கே விருப்பம் இல்லையோ?! என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இறுதியில் அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு, நடைமுறையில் தோல்வியை தழுவியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.