நக்கீரன் கோபால் விடுதலை நீதிபதி அதிரடி அறிவிப்பு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் மீது அவதூறு பரப்பியதாக கூறி நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தது.

இதனை தொடர்ந்து இன்று சென்னை விமான நிலைwத்தில் வைத்து நக்கீரன் கோபல் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து சிந்தாரி பேட்டை காவல் நிலையத்தில் வைத்து 5 மணி நேரத்திற்கு மேல் விசாரனை நடத்தபட்டது வருகிறார். பின் உடல் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இதன் பின் சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். இந்த வழக்கு நீதிபதி கோபிநாத் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.

அப்போது, நக்கீரன் கோபல் தரப்பில் ஆஜரான வக்கில், நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை ஆளுநரை எந்த வகையிலும் மிரட்டும் விதமாக இல்லை. மேலும் ஆளுநரையோ அல்லது ஜனாதிபதியையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணியை தடுத்தால் மட்டுமே சட்டப் பிரிவு 124 Aன் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும். நக்கீரன் கோபால் கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என வாதிடபட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி., நக்கீரன் கோபால் மீது போடபட்ட தேசதுரோக வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் அவரை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து நக்கீரன் கோபால் லிடுதலை செய்யப் பட்டுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.