பிரித்வி ஷாவுக்கு சவால்? கங்குலி ரோகித் அசாருதீன் சாதனையை சமன் செய்வரா?

வின்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலே தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அறிமுக போட்டியிலே சதம் குறைந்த வயதிலே சதம் அடித்தவர் மற்றும் முதல் போட்டியிலே மேன் ஆஃப் தி மேட்ச் என பல சாதனைகளை படைத்தார் பிரித்வி ஷா.

இந்நிலையில் நாளை(அக்.12) வின்டீஸ் அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டகாரராக களம் இறங்க போகும் பிரித்வி ஷாவுக்கு முன் கங்குலி, ரோகித், அசாருதீன் ஆகியோர் செய்த சாதனையை சமன் செய்யும் சவால் காத்திருக்கிறது.

இதுவரை இந்திய அணியில் டெஸ்டில் அறிமுகமான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்தவர்கள் கங்குலி, ரோகித் ஷர்மா, அசாருதீன் ஆகியோர் மட்டுமே. இந்த சாதனையை 1984ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அசாருதீனும, 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கங்குலியும், 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரோகித் சர்மாவும் இந்த சாதனையை செய்தனர்.

தற்போது பிரித்தி ஷா வின்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் (132 ரன்கள்) விளாசியுள்ளார். இதே போல் நாளை தொடங்க உள்ள வின்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து கங்குலி, ரோகித் மற்றும் அசாருதீன் ஆகியோரின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.