பிரித்வி ஷா என்ன சேவாக்கா? காட்டமாக பதிலளித்த கம்பீர்

பிரித்வி ஷாவை ஏன் சேவாக்வுடன் ஒப்பிடுகிறீர்கள் என காட்டமாக கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர்.

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், தற்போது சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடல், சமூக சேவை மற்றும் தொலைகாட்சிகளுக்கு பேட்டி என தனது வாழ்க்கையை கழித்து வருகிறார்.

நேற்று தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த கம்பீர், பிரித்வி ஷாவை சேவாக்வுடன் ஒப்பிட கூடாது என காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது.,

பிரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் ஒரு வீரரை இன்னொரு வீரரிடம் ஒப்பிட்டு பேசுவதே மிகப் பெரிய தவறு.

பிரித்வி ஷா ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர், அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவர் தற்போது தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது, மேலும் அவர் முன் ஏராளமான சவால்களும் சாதனைகளும் காத்து இருக்கின்றனர். சேவாக்கிற்கு எப்படி தனித்துவம் உள்ளதோ அதேபோல் பிரித்வி ஷாவிடமும் உள்ளது.

சேவாக் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவ வீரர். எனவே சேவாக்குடன் பிரித்வி ஷாவை ஒப்பிட்டு பேசும் முன் சற்று சிந்தியுங்கள். பிரித்வி ஷா அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஜொலிப்பார் என கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.