புதிய கருத்து கணிப்பு வெளியானது.. படுதோல்வியை சந்திக்கும் பெரிய கட்சி

2014 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இத்தேர்தலுக்கு தயராகும் வகையில் தேசிய கட்சி முதல் மாநில கட்சி வரை ஆயத்த பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றன.

இந்திலையில் வருகிற லோக்சபா தேர்தலில் எந்த மாநிலத்தில் எந்த கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்து கணிப்பை நடத்தியது ரிபப்ளிக் டிவி மற்றும் சி வோட்டர் அமைப்பு. அதன் முடிவை இன்று வெளியாகி உள்ளது.

இதில் தமிழ்நாட்டை பொறுத்த வரை தி.மு.க தான் அமோக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின் படி., வருகிற லோக்சபா தேர்தலில் திமுக 28 பாராளுமன்ற தொகுதிகளிலும், அதிமுக 9 பாராளுமன்ற தொகுதிகளிலும், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எந்த இடத்திலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கிறது.

வாக்கு சதவீதத்தை பொறுத்த அளவில் திமுகவிற்கு 39.4 சதவீத வாக்குகளும் அதிமுகவிற்கு 23.5 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்பதை இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது பாஜக கூட்டணிக்கு 8.8% வாக்குகள் கிடைக்குமா ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 3.7% சதவீதமும், மற்ற கட்சிகள் 24.7 சதவீதம் வாக்குகளை பெறுவார்கள் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், பாஜாக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை வென்ற அதிமுக இம்முறை 9 தொகுதிகளை மட்டுமே பெறும் என்று கூறப்பட்டுள்ளது அதிமுக மீது மக்களின் அதிருப்தியையே காட்டியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.