பெட்ரோல் விலையை அதிரடி குறைப்பு இவ்வளவு ரூபாய் குறைந்துள்ளதா? அதிரடியாய் அறிவித்த மம்தா

சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணத உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தினமும் இரு சக்கர வாகனம் பயன்படுத்தும் சமானிய மக்களின் பாடு படாத பாடாய் உள்ளது. இதனால் நாட்டின் மக்கள் அனைவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

ஆனால் ஆளும் பாஜக அரசின் அமைச்சர்கள் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு அரசின் கையில் இல்லை என்றும், பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி வருகின்றனர்.

இந்நிலைில் ஆந்திர மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் சந்திர பாபு நாயுடு மற்றும் வசூந்திரா ராஜே அகியோர் பெட்ரோல் மீதான மாநில அரசின் வாட் வரியை குறைத்துள்ளனர். இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை அம்மாநிலங்களில் கணிசமான அளவு குறைந்துள்ளது.

இதே போல் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளார். இதன் மூலம் அம்மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை ரூ 1 குறைந்துள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.