மலிங்கா மீது சின்மயி பகீர் பாலியல் புகார்.. இது தான் நடந்ததா..

சமீப காலமாக பாடகி சின்மயி பெண்களுக்கு எதிரான நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை #Me too என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி மீது பாலியல் புகார்களை வெளியிட்டு தமிழ் சினிமா உலகிற்கு அதிர்ச்சி அளித்தார் சின்மயி.

இதனை தொடர்ந்து ஐ.பி.எல் மும்பை அணியில் கொடி கட்டி பறந்தவரும், இலங்கை அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தியுள்ளார் சின்மயி.

பெயர் சொல்ல விரும்பாத பெண்ணின் பாலியல் குற்றசாட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருப்பதாவது,

இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நான் மும்பையில் இருந்த போது நடந்தது. நான் ஒரு முறை என் தோழியை சந்திக்க மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது அங்கு பிரபல கிரிக்கெட் வீரர் லசித் மலிங்காவை பார்த்து பரவசப்பட்டேன்.

அவர் என்னிடம் உன் தோழி என் அறையில் இருக்கிறாள் என்று கூறினார். நான் அங்கு சென்று பார்த்த போது. என் தோழி அங்கு இல்லை.

அங்கு அவர் என்னை படுக்கையில் தள்ளி தவறாக நடக்க முயற்சித்தார். அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அந்த சமயம் ஓட்டல் ஊழியர் கதவை தட்டினார். கதவை திறந்ததும் நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

எனக்கு தெரியும், அவர் பிரபலம் என்பதால் நானாக அவரது அறைக்கு சென்றிருக்கலாம் என்று சிலர் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.