முதல்வர் பதாகை மீது ச்சீ.. செய்த அமைச்சர் அடடே விளக்கம்

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு வருகிற டிசம்பர் 7ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க அசுர வேக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது பாஜக.

தேர்தல் பிரச்சாரதிற்காக ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பேரணி ஒன்றை நடத்தியது பாஜக. இதில் பாஜக அமைச்சர் ஷம்பு சிங் கேதாசர் கலந்து கொண்டார். பேரணி நடந்த பகுதிக்கு பின்புறம் சென்ற அமைச்சர் ஷம்பு சிங் கேதாசர், முதல்வர் வசுந்தரா ராஜேவின் பதாகை மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதனை புகைப்படம் எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றி அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட போது.,

பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது என்பது பழங்கால பழக்கம். இதனால் எந்த ஒரு சுகாதாரகேடும் வராது. நான் முதல்வர் பதாகை மீது சிறுநீர் கழிக்கவில்லை. சிறிது தூரம் தள்ளிய சிறுநீர் கழித்தேன்.

காலை நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக இருந்தேன். அந்தப் பகுதியில் சிறுநீர் கழிப்பதற்கான இடம் ஏதும் இல்லை. அதனால் தான் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

தூய்மை இந்தியா திட்டம் தீவிரமாகச் செயல்படுத்திவரும் நிலையில், இது போன்று திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது தவறு தான் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தானின் ஒரு நகரம் கூட முதல் 150 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.