முன்பே திட்டமிடப்பட்ட நக்கீரன் கோபல் கைது அதிர்ச்சி தகவலை வெளியிட்ட முத்தரசன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளுநர் சந்திப்பின் போதே நக்கீரன் கோபல் கைது பற்றி விவாதிக்கபட்டது கம்யூனிஸ்ட் தலைவர்முத்தரசன் பரபரப்பு பேட்டி.

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆளுநர் மீது அவதூறு பரப்பியதாக கூறி நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தது.

இதனை தொடர்ந்து இன்று சென்னை விமான நிலைwத்தில் வைத்து நக்கீரன் கோபல் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து சிந்தாரி பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கபட்டு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, பின் விடுதலை செய்யபட்டார்.

இந்நிலையில் நக்கீரன் கோபால் கைது பற்றி பேட்டியளித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் கூறியதாவது.,

கடந்த அக்டோபர் 6ந் தேதி இரவு தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அப்போது ஆளுநர், நக்கீரன் பத்திரிக்கை தொடர்ந்து தன்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறது. ஏன் தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வினாவியுள்ளார். அதற்கு முதல்வர் எடப்பாடி, உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாகவும், நக்கீரன் கோபலின் கைது முன்பே திட்டமிடப்பட்டது என முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.