ஸ்மார்ட் ஃபோன் உலகில் புரட்சி நான்கு பின்புற கேமராவுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி A9 (2018)

சாம்சங் நிறுவனம் அவ்வப்போது ஸ்மார்ட் ஃபோன் உலகில புதிய தொழிற்நுட்பத்துடன் ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிட்டு மாபெரும் புரட்சி செய்யும். அதே போல் நேற்று கோலா லம்பூரில் நடைபெற்ற விழாவில், உலகின் முதல் நான்கு பின்புற கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A9 (2018) மாடல் ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A9 (2018)ன் விலை €599 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 51300 ரூபாய். இந்த விழாவின் போது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A9 (2018)ன் விலை அறிவிக்கப்படவில்லை.

இந்த மாடல் முழுக்க முழுக்க பயனாளருக்கு நல்ல புகைப்பட அனுபவத்தை தருவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நான்கு கேமராக்களும் நான்கு தனித்தனியான லென்சுகள் பயன்படுத்தபட்டுள்ளது. முதன்மை பின்புற கேமரா 24 மெகாபிச்சலும் ( f/1.7 aperture) கொண்டது, மேலும் 10 மெகாபிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா. 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வைய்ட் கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட டெப்த் கேமரா ஆகிய நான்கு கேமராக்கள் பின்புறமும். 24 மெகாபிக்சல் ( f/2.0 aperture) முன்புற கேமரா உள்ளது.

இதில் பிக்ஸ்பை அசிஸ்டன்ட் மற்றும் சாம்சங் பேவும் தவிர, ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது. ஸ்மார்ட் ஃபோனின் பின்புற பேனலில் ஒரு கைரேகை சென்சாரும் உள்ளது.

இந்த ஸ்மார்ட் ஃபோன் ஆன்ட்ராய்ட் ஒரியோ 8.0 இயக்கு தளம் மூலம் இயங்குகிறது. இதில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஒ.சி ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. மேலும் இதில் இது 8 அல்லது 6 ஜிபி ரேம் என இரு மாடல்களில் வெளியாக உள்ளது.

மேலும் இது ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3800 mAH பேட்டரி திறன் கொண்டது. சேமிப்பு திறனை பொறுத்த வரை 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி மூலம் 512 ஜிபி வரை விரிவாக்கமும் செய்ய முடியும். இதில் இரட்டை நானோ சிம் கார்ட் வசதியும், யூஎஸ்பி டைப் சி வசதியும் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.