ஃபேஸ்புக்கை டெலிட் செய்யுங்கள் வாட்ஸ்அப் குழுமம்..

வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன்,இது ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம்’ என்று கூறிள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ஃபேஸ்புக்கில் இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடியதாகவும்,அதை வைத்து தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், வாட்ஸ் அப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஃபேஸ்புக்கை பற்றி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘இது ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பயனாளர்களின் தகவலை பாதுகாப்பதில் ஃபேஸ்புக் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது, இவருடைய இந்த டுவிட்டர் பதிவு சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.