டிராய் : ஏர்டெல்லை பாதாளத்தில் தள்ளிய ஜியோ!

ஜியோ வருகையை தொடர்ந்து தொலை தொடர்பு துறையில் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், சேர்க்கவும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஏர்டெல் மற்றும் ஜியோ நேரடியாக மோதுகின்றன.

இன்று டிராய் வெளியிட்ட ஜனவரிக்கான அறிக்கையின் படி ஏர்டெல் 291.61 மில்லியன் வாடிக்கையாளருடன் முதல் இடத்திலும், வோடஃபோன் இந்தியா 223.81 மில்லியன் வாடிக்கையாளருடன் இரண்டாவது இடத்திலும், ஐடியா 197.64 வாடிக்கையாளருடன் மூன்றாவது இடத்திலும், ஜியே 168.39 மில்லியன் வாடிக்கையாளருடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இதில் ஜியோ ஜனவரியில் மட்டும் 8.3 மில்லியன் வாடிக்கையாளரை சேர்த்துள்ளது. அடுத்த இடத்தில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் முறையே 1.5 மில்லியன் மற்றும் 1.4 மில்லியன் வாடிக்கையார்களை பெற்றுள்ளது. ஜியோ தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. ஆனால் ரிலையன்ஸ் கம்யுனிகேசன் 21.8 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

மேலும் ஜியோவின் சந்தை மதிப்பு 14% அதிகரித்தும். அதனையடுத்து ஏர்டெல் மற்றும் வோடஃபோன் இந்தியா முறையே 25.32% சதவீதமும் 18.56 சதவீதமும் அதிகரித்து உள்ளது என டிராய் அறிக்கை கூறியுள்ளது..

இதில் BSNL மட்டும் ஜனவரியில் 0.39 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் 9.4% சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.