பிரியா வாரியரின் புகைபடத்தை பயன்படுத்திய போலிசார்!

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடலில், நடிகை பிரியா வாரியரின் கண் அசைவுகள் ரசிகர்களைக் பெரிதும் கவர்ந்துள்ளது.இதனால் இணையம், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பிரியா வாரியர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில், பிரியா வாரியரின் கண் அசைவுகளை வைத்து ‘சாலை விழிப்புணர்வை’ ஏற்படுத்திடும் வகையில் குஜராத்தின் வதோரா நகர போலீசார் வகையில் புது முயற்சியை செய்துள்ளனர்.

குஜராத்தின் வதோரா நகர போலீசாரின் பேஸ்புக் பக்கங்களில் பிரியா வாரியரின் கண் அசைவுடன் எச்சரிக்கை வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதில், ”கண்ணசைவில் விபத்துகள் நேரிடலாம். கவனச்சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.