இடைத்தேர்தலை சந்திக்கும் தமிழகம்! ஸ்டாலின் அதிரடி!

தமிழகத்தில் வெகு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இனிவரும் சட்டமன்ற தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த திமுக இணைப்பாளர்கள் தேர்தல் பணிகளை எவ்வாறு எடுத்து நடத்த வேண்டும் என்கிற வழிமுறை எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கூட்டம் முடிந்த பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் பேசியதாவது:-

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திமுகவை பொறுத்தவரை ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே.,அதுதான் திமுகவின் முக்கிய கொள்கை.

இந்த தீர்ப்பு அதிமுகவிற்கு சாதகமா, பாதகமா என்பது அவர்களின் உட்கட்ட பிரச்சனை. அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை. ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ள நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய என்கிற தீர்ப்பின்படி தற்போது தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கிறது.

இந்த 20 தொகுதிகளுக்கும் தகுந்த சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க உடனடியாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.