திமுக-வும் அதிமுக-வும் இடைத்தேர்தலுக்கு பயப்படுகிறது-பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் திமுகவும், அதிமுகவும் அதனை எதிர்கொள்ள பயப்படுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய என்கிற தீர்ப்பின்படி, தமிழகத்தில் தற்போது மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கிறது.

இந்த 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தலை எதிர்பார்த்த வண்ணமே பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நியூஸ்-7 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது.,

தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தயக்கம் காட்டுகிறது. இதற்குமுன் காலியாக இருந்த திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வந்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரெட்-அலர்ட் வரவிருப்பதாக கூறி இடைத்த்தேர்தலை தள்ளி போட்டுவிட்டார்.

மற்றொரு பக்கம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற குழப்பத்திலேயே உள்ளார். இதற்குமுன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பெரும் தோல்வி அடைந்த திமுக கட்ச, இனி வரும் தேர்தலிலும் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.