பாத்ரூமில் வைத்து என்னை.. பிரபல தமிழ் நடிகைக்கு நேர்ந்த சோகம்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தி தமிழ் சினிமாவில் #MeeTooவை தொடங்கி வைத்தார் பாடகி சின்மயி. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல இள நடிகைகள், சினிமா துறையில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பற்றி தினம் தினம் கூறி வருகின்றனர்.

தமிழில் வேறென்ன வேண்டும். பீப், உச்சம், தெலுங்கில் ராம ராம கிருஷ்ண கிருஷ்ண படங்களில் நடித்திருப்பவர் பிரெர்னா கண்ணா. இவர் தனக்கு சினிமா துறையில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது.,

என் அப்பா வயது இருக்கும் நடிகர் ஒருவர், தான் புது படம் ஒன்று இயக்க போறேன். அந்த படத்தில் உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று கூறி என்னை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வரச் சொன்னார். மேலும் வரும் போது தனியாக தான் வர வேண்டும், உடன் அம்மா, தாத்தா என யாரையும் அழைத்து வர வேண்டாம் என கூறினார்.

இருந்தாலும் நான் அவர் சொன்ன ஹோட்டலுக்கு என் அம்மாவுடன் சென்றேன். என்னை பார்த்த நடிகர், என் அம்மாவை ஹோட்டல் ரிசப்சனில் அமர வைத்தார். பின் என்னை ஆடிசனுக்காக ஹோட்டல் சூட் ரூமுக்குள் அழைத்து சென்றார்.

அங்கு நாங்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்தோம். அவர் என்னை கண்ணில் இருக்கும் கண்மையை அழித்து வர சொன்னார். நான் உடனே பாத்ரூமிற்குள் சென்று கண்மையை அழித்து கொண்டு இருந்தேன். என் பின்னால் பாத்ரூமிற்குள் வந்த அவர், என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார்.

நடிகரின் இந்த செயலால் நான் அதிர்ச்சி அடைந்தேன். பின் சுதாரித்து கொண்டு நடிகரை கீழே தள்ளி விட்டு நான் ஓடி வந்து விட்டேன். அந்த நபருக்கு என் வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இருந்தும் அவர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.