விராட் கோலியின் உருவத்தை வரைந்து ஆச்சர்யமூட்டும் சாதனை செய்த ரசிகன்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோவியின் உருவத்தை, மொசைக் தரையில் தீபங்களை மட்டுமே வைத்து வரைந்து அசத்தியுள்ளார் மும்பையை சேர்ந்த ஓவியக் கலைஞர்.

மும்பையை சேர்ந்த ஓவியக் கலைஞர் ஆபாசாஹேப் சேவலே. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகரான இவர், விராட் கோலியின் உருவத்தை 14 அடி நீளம் மற்றும் 9.5 அடி அகலம் கொண்ட மொசைக் கல்லில் அகல விளக்குகளை வைத்து உருவாக்கியுள்ளார்.

virat12இதற்காக இவர் ஆறு வண்ணங்கள் உடைய ( சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பழுப்பு ) 4482 அகல் விளக்குகளை பயன்படுத்தியுள்ளார். மேலும் விராட் கோலியின் உருவத்தை 8 மணி நேரத்தில் வரைந்து முடித்துள்ளனர்.

இதை பற்றி ஆபாசாஹேப் சேவலே கூறும் போது, நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். எனவே இந்த புகைபடத்தை விராட் கோவியின் பிறந்த நாள் (நவம்பர் 5) பரிசாகவும் மற்றும் தீபாவளி பரிசாகவும் விராட் கோலிக்கு நான் சமர்பிக்கிறேன்.

நாங்கள் உருவாக்கிய விராட் கோலியின் உருவத்தை கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்துள்ளோம். மேலும் எங்களது இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.