இடைத் தேர்தலுக்கு மாஸ்டர் ஃப்ளான் போடும் அதிமுக

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்று இருக்கும் 20 தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக கட்சி இப்போதே தயாராகி விட்டதாம்.

அதிமுக தலைமையிலான தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்த அந்த எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சமீபத்தில்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே அதிமுக அமைச்சர் ஏ.கே.போஸ் அவரது மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும், திமுக தலைவர் கருணாநிதி மறைவால் திருவாருர் தொகுதியும் காலியாக உள்ளது. எனவே இந்த 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக இப்போதே தயாராகி விட்டதாம். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே நியமித்து விட்டதாம்.

மேலும் இந்த இடைத்தேர்தலுக்கான ஆலோசனை கூட்டத்தை நாளை (3-ந் தேதி) நடத்த உள்ளதாம். இந்த கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளதாம்.

தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி? நலத்திட்டங்களை எப்படி மக்களிடம் எடுத்து கூற வேண்டும்?, என்று இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வலையுறுத்தப்பட உள்ளதாம்.
அதன்படி 20 தொகுதியிலும் அதிமுக கட்டாயமாக வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என்பதால், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை தீவிரமாக களப்பணியில் ஈடுபடுத்த எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் மும்மரம் காட்டி வருகின்றனராம்.

இதில் சுவாரசியம் என்னவென்றால்., இதுவரை அதிமுகவின் ஒரு உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, முதல்முறையாக தமிழக முதல்வராக இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.