சுப்ரீம் கோர்ட்டுக்கு நியமிக்கப்பட்ட 4 புதிய நீதிபதிகள் | யார் யாருனு தெரியுமா?

சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் கொலிஜியம் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐகோர்ட்டில் தற்போது தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வரும் ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி, எம்.ஆர்.ஷா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகிய நான்கு பேரைத்தான் கொலிஜியம் அமைப்பு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக தேர்வு செய்துள்ளது.

இதையடுத்து இவர்களின் பதவி நியமனத்திற்கான பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய சட்ட அமைச்சகம் ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி, எம்.ஆர்.ஷா, ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகிய நான்கு பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நேற்று நியமித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.