தீபாவளிக்கு வசூல் வேட்டையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்! லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் சிக்கிய 44.30 லட்சம்.

தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் மாமூல் வசூலிப்பதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் தமிழகம் முழுவதும் 24 அலுவலகங்களில் ரூ.44.30 லட்சத்தை கைப்பற்றினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டி தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழக அரசு அலுவலங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத கட்டுக் கட்டண பணங்கள் சிக்கியுள்ளன.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்த அரசு அலுவலகங்கள் பின்வருமாறு:-

நகராட்சி அலுவலகங்கள், அறநிலையத்துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், பொதுப்பணித் துறை அலுவலகங்கள், டாஸ்மாக் அலுவலகங்கள், மற்றும் ஆவின் பால் அலுவலகங்கள் ஆகிய முக்கிய அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் அரசு அலுவலகங்களின் விவரமும் கைப்பற்றப்பட்ட பணம் விவரமும் வருமாறு:-

சென்னை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் – ரூ.80 ஆயிரம்;

சென்னை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் – ரூ.52,600;

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் – ரூ.28,500;

கோவில்பட்டி ஆர்.டி.ஓ. (வட்டார போக்குவரத்து அதிகாரி) அலுவலகம் – ரூ.1.53 லட்சம்;

பழனி அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் – ரூ.34 ஆயிரம்;

ஓசூர் ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடி – ரூ.1.32 லட்சம்;

தென்காசி ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.87 ஆயிரம்;

திருவண்ணாமலை ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.9.98 லட்சம்;

ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.44,500;

புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.55,925;

வேலூர் ஆவின் பொதுமேலாளர் அலுவலகம் – ரூ.16.80 லட்சம்;

சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் – ரூ.2.49 லட்சம்;

நீலகிரி பொதுப்பணித்துறை பராமரிப்பு அலுவலகம் – ரூ.2.01 லட்சம்;

தேனி ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.14,680;

கடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.3.90 லட்சம்;

விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் – ரூ.88,140;

கோயம்புத்தூர் ஆர்.டி.ஓ. மத்திய அலுவலகம் – ரூ.1.04 லட்சம்;

ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.55,951;

மேட்டூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.84,450;

நாமக்கல் சார்பதிவாளர் அலுவலகம் – ரூ.40,900;

மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.4 ஆயிரம்;

தேவகோட்டை சார்பதிவாளர் அலுவலகம் – ரூ.10 ஆயிரம்;

கீழக்கரை நகராட்சி அலுவலகம் – ரூ.6 ஆயிரம்;

கரூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் – ரூ.32,900.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.