தீயாய் பரவும் வதந்தி.. உண்மை இதுதான் முற்றுபுள்ளி வைத்த அமைச்சர் மஃபா.பாண்டியராஜன்

இந்தியா சுதந்திரம் அடைந்த போது சிறு சிறு சமாஸ்தானங்களாக சிதறி இருந்த இந்தியாவை,  ஒருங்கிணைந்த இந்தியாவாக மாற்றியவர் முன்னாள் இந்திய துணை பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
இதற்காக படேலை கவரப்படுத்தும் விதமாக குஜராத்தின் நர்மதை ஆற்றின் கரையில் 597 அடி உயர உலகின் மிகப் பெரிய சிலை statue of unity (ஒற்றுமையின் சிலை)  அமைக்கபட்டது. வல்லபாய் படேல் சிலையை கடந்த அக்டோபர் 31ந் தேதி மோடி திறந்து வைத்தார்.
சிலை வளாகத்தில் உள்ள பலகையில் Statue of Unity என்ற பெயர் பல மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. இதனை தமிழில் ஒற்றுமையின் சிலை என எழுதி இருக்க வேண்டும். ஆனால் அந்த பலகையில் “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என பிழையாய் எழுதப்பட்டிருந்தது. இந்த பலகையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாய் பரவியது.
இதனை தொடர்ந்து இந்த செயல் திட்டமிட்ட சதி என்ற பாஜக மீதும் மோடி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதனால் தமிழிசை போன்ற மூத்த பாஜக தலைவர்கள் இது பாஜக மீது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்தனர். இவர்களது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ‘தமிழில் தவறாக எழுதப்பட்டது  தொடர்பாக வெளியான படம் போலியானது என்றும். அப்படி எந்த பெயர்ப் பலகையும் படேல் சிலை உள்ள பகுதியில் வைக்கப்படவில்லை என குஜராத் அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியானது.
இவ்வாறு இணையத்தில் பரவிய இரு வேறு கருத்துகளால், எது உண்மை எது வதந்தி என புரியாமல் இணையவாசிகள் குழப்பமடைந்தனர். இவற்றிற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக மஃபா.பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது.. படேல் சிலை வளாகத்தில் “Statue Of Unity’  என்பதை தமிழில் தவறாக பலகையில் எழுதப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்ததும், இது தொடர்பாக சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவன தலைவரிடம் பேசினேன். தமிழ் மொழியில் எழுதப்பட்டிருப்பதில்  பிழை இருந்தது உண்மைதான் என அவர் தெரிவித்தார். இந்த பெயர் பலகை படேல் சிலை உள்ள பகுதியில் இருந்து தொலைவில் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக  வைத்திருக்கிறார்கள். இந்தப் பணியை மேற்கொண்ட குழுவில் தமிழர்கள் பலர் இருந்தும் இதுபோன்ற தவறு நடந்திருப்பது துர்திருஷ்டவசமானது.
கடந்த 30-ம் தேதி வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மட்டுமல்லாது 3 மொழிகளில் பிழை இருந்துள்ளது. இதனை அறிந்ததும் வைத்த ஒரு மணி நேரத்துக்குள் அதனை அகற்றி விட்டார்கள். ஆனாலும் இதனை ஒரு பத்திரிகையாளர் படம் எடுத்து விட்டதால் பரவிவிட்டது.
பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் படேல் சிலை வளாகம் முழுவதையும் தேசிய பாதுகாப்பு படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இதனால் தவறைத்  திருத்தி புதிய பலகையை வைக்க தனியார் கட்டுமான நிறுவனத்தால் முடியவில்லை. நடந்தது இதுதான் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: