ரஜினிக்கு மேரி அளித்த குத்து சண்டை பயிற்சி தீயாய் பரவும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு குத்து சண்டை சூப்பர் ஸ்டார் மேரி கோம் குத்து சண்டை பயிற்சி அளித்த புகைப் படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

லண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் குத்துசண்டை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றவர் மேரி கோம். இவர் இதுவரை ஐந்து முறை ஏசியன் சாம்பியன் பட்டமும், ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக செயல்பட்டு வருகிறார்.

இவர் குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்திய நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு மேரி கோம் லதா ரஜினிகாந்திடம் நான் ரஜினி சாரை சந்திக்க முடியுமா? இப்போது எங்கு ரஜினி சார் இருக்கிறார் என கேட்டார்.

இதற்கு லதா ரஜினிகாந்த், ரஜினி சார் பேட்ட திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் தான் ஓய்வு எடுத்து வருகிறார் என கூறினார். பின் மேரி கோம் ரஜினியை சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ரஜினியின் வீட்டிற்கு சென்ற மேரி கோம். அங்கு அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். பின் வீட்டை விட்டு புறப்பட்டு செல்லும் போது மேரி கோம் ரஜினிக்கு குத்து சண்டை பயிற்சி அளித்தார். அதன் பின் இருவரும் குத்து சண்டை போடுவது போது புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.