ஷாருக் கானின் வீட்டை முற்றுகையிட்ட ரசிகர்கள் | எதற்காக தெரியுமா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நள்ளிரவில் ரசிகர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் பிரபல நடிகரான ஷாருக் கானுக்கு இன்று 53-வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு முதலே அவரது வீட்டை சுற்றி அவரது ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஷாரு கான் தற்போது ஜீரோ உழைத்த இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ள படம் அடுத்த மாதம் திரையில் வெளிவரவுள்ளது. மேலும் இன்று பிறந்த நாள் காணும் ஷாரு கானுக்கு பாலிவுட் வட்டாரமே வாழ்த்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் மன்னாட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஷாருக் கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்வாறு நள்ளிரவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ஷாருக் கானின் வீட்டை அவரது ரசிகர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.