சிவலிங்கத்தின் மீது தேள் போன்றவர் பிரதமர் மோடி! சசி தரூரின் சர்ச்சை பேச்சு.

சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர் நரேந்திர மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெங்களூரில் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் மந்திரி சசி தரூர், மேடையில் பேசியுள்ளார்.

Image result for narendra modi

அந்த சமயத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் குறிப்பிட்டு பேசுகையில்., ‘மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது’ என்று சசி தரூர் உதாரணம் காட்டி பேசியுள்ளார்.

சசி தரூரின் சர்ச்சை மிகுந்த இந்த பேச்சை சில ஊடகங்கள் கேலியாக சித்தரித்து வீடியோ வடிவில் செய்தியாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய சசி தரூருக்கு எதிராக பாஜகவினர் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்ததுடன் சிவபக்தரான தனது மத உணர்வையும் கோடிக்கணக்கான சிவனடியார்களின் பக்தியையும் இழிவுபடுத்தி விட்டதாக முன்னாள் மந்திரி சசி தரூர் மீது டெல்லி பா.ஜ.க. தலைவர் ராஜீவ் பபர் டெல்லி கோர்ட்டில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.