பெட்ரோல் விலை குறைந்துவிட்டது | லிட்டர் ஒன்று ரூ.81.84 காசுகளுக்கு விற்பனை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படும் என்கிற நிலைக்கு வந்த பிறகு, நாளுக்கு நாள் அதன் விலை அதிகரித்து வந்து கொண்டே இருந்தது. கடந்த மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மக்களை மிரட்டும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிது அவதிக்குள்ளாகினர்.

இதை தொடர்ந்து கடந்த 18-ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இதனுடைய விலைகள் சற்று சரிவை கண்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெட்ரோல் விலை பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது. இதுபோல டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.