இந்தியன்-2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?

கமல் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன்-2 படத்தில் அவருக்க ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன்-2 உருவாக இருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இந்த 2-ஆம் பாகத்திலும் கமல் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மீண்டும் ஷங்கர் இயக்குவதால் இது மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது.

இந்த படத்திற்காக கமல் உடல் எடையை குறித்து வருகிறாராம். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையான நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் மட்டும் நடித்து வரும் நயன்தாரா, இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Image result for kamal hassan kajal agarwal

இதை தொடர்ந்து தற்போதைய தகவல்படி இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். தென்னிந்திய மொழியின் முன்னணி நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார். இப்போது கமலுடனும் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.