சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்!

பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் இடும்பன்மாலை பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ். வயது 43 ஆகும். பிரபல சின்னத்திரை நடிகரான இவர் கோலங்கள், மெட்டிஒலி, நாதஸ்வரம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ஒருசில திரைபடஙகளிலும் நடித்துள்ளார் குறிப்பாக எம்டன் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விஜயராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார் அப்போது நேற்று (04/10/2018) வீட்டிலிருந்த விஜயராஜுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது வலியால் அலறி துடித்த அவர் மயங்கி விழுந்தார்.

அவருடைய சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு வழியிலேயே விஜயராஜ் இறந்துவிட்டதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜயராஜின் இந்த இழப்பு சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.