முதல் முறையாக தோனி இல்லாத T20 போட்டி|இந்திய அணி வெற்றி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கிரிக்கட் உலகின் சாதனை கேப்டனாகவும் இருந்து வரும் எம்.எஸ்.தோனி இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணி விளையாடியுள்ளது.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விளையாடி வந்த இந்தியா முதல் முறையாக கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி T20 போட்டியில் அறிமுகம் ஆனது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சவுத் ஆப்ரிக்கா அணி விளையாடியது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் ஆட்டத்தில் ப்ஃளையிங் 11-ல் எம்.எஸ்.தோனி எம்எஸ் டோனி இடம்பிடித்திருந்தார்.

அதன்பின் இன்றைய போட்டிக்கு முன் வரை இந்தியா 93 போட்டிகளில் விளையாடிள்ளது. இந்த 93 ஆட்டத்திலும் டோனி இடம்பிடித்திருந்தார். ஆனால் முதல் முறையாக நேற்று தோனி இல்லாத இந்திய அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவு அணியை எதிர்த்து விளையாடியுள்ளது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

என்னதான் இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், எம்.எஸ்.தோனி அணியில் இல்லாதது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தோனி இதுவரை விளையாடிய 93 T20 போட்டிகளில் இரண்டு அரைசதங்களுடன் 1487 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.17 ஆகும். அவரது ஸ்கோரில் 47 சிக்ஸ், 107 பண்டரி அடங்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.