சபாநாயகர் திடீர் ராஜினாமா! காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவல்!

மிசோரம் மாநில சட்டசபை சபாநாயகர் இன்று திடீரென தன்னுடைய சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் 28-ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதற்காக காங்கிரசின் முக்கிய தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், பாலக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சபாநாயகர் ஹிபேய் இன்று திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஹிபேய், தன் ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் வழங்கினார். அவருடன் பாஜக மூத்த தலைவர் பிடி சக்மா மற்றும் சிலர் உடன் சென்றனர்.

Image result for cong vs bjp

மேலும் இன்று பிற்பகல் ஐசாலில் உள்ள பாஜகவின் தலைமையகத்திற்கு ஹிபேய் செல்லவிருப்பதாகவும், முறைப்படி பாஜகவில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலக் தொகுதியின் வெற்றி வேட்பாளரான ஹிபெய் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.