ரஜினி அஜித் நேரடி மோதல்! தாங்குமா தமிழ் சினிமா..

வருகிற ஜனவரி 10 பொங்களன்று ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விசுவாசம் திரைப்படமும் ஒரே நேரத்தில் ரிலிசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2.0 படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்பாகவே முடித்துள்ளனர் பேட்ட படக்குழுவினர்.

இதனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் திரைப்படத்தை ரிலீஸ் செய்தது போல் பொங்களுக்கு ரஜினியின் பேட்ட திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பேட்ட படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் டப்பிங் பணிகளை முடுக்கி விட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

இயக்குனர் சிறுத்தை சிவாவும் தல அஜித்தும் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் விசுவாசம். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொட்க்சன் பணியில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.

அஜித் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக எந்த படமும் வெளியாகத நிலையில், விசுவாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் விசுவாசம் படம் பொங்களன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

ரஜினி மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நேரத்தில் பொங்களன்று வெளியாகும் என்ற அறிவிப்பால் ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.