விஜய்யின் சர்காருக்கு பாடம் புகட்டிய ரஜினிகாந்த்!

சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சியின் மூலம் தமிழக அரசியலில் கால் பதிக்க காத்திருக்கும் நடிகர் விஜய்க்கு முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்.

தீபாவளி நாளான நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் திரையில் வெளியானது. முழுக்க முழுக்க அரசியல் காட்சிகள் இடம்பெற்ற இந்த படத்தில் விஜயின் நடிப்பைக் கண்ட ரசிகர்கள் விஜய் அரசியலில் கால் பதிக்கப் போவதாக தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில விஜய் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று., எம்.ஜி.ஆர் 1972-ல் இரு விரல் புரட்சி செய்தார் என்றும், எங்களுடைய தளபதி விஜய் 2018-ல் ஒரு விரல் புரட்சி செய்யப்போவதாகவும் இதனால் நடிகர் விஜய், எம்.ஜி.ஆர்-க்கு இணையானவர் என்றும், ஒரு பேனரில் சித்தரித்து அவர்களுடைய எண்ணத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கும் ஒரு செய்தி, மறைமுகமாக நடிகர் விஜய்யையும் அவருடைய ரசிகர்களையும் தாக்கி பேசியிருப்பது போல் காட்டுகிறது.,

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ரஜினிகாந்திடம், எம்.ஜி.ஆ-ரின் இடத்தை யார் நிரப்புவார்கள்?, என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்.,

இல்லை. அவர் ஒரு தெய்வப்பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்கவோ நிரப்பவோ முடியாது. அவரை பார்த்து மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நெருக்கத்தில் செல்ல செல்ல அது அதிகமானது. என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த பதில், ஒரு விரல் புரட்சியின் மூலம் விஜய் அரசியலில் கால் பதிப்பார் என்று நினைக்கும் விஜய் ரசிகர்களுக்கும், எம்.ஜி.ஆர்-ரும், விஜய்யும் ஓன்று என்று என்னும் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.