இடைத்தேர்தலில் 20 தொகுதியிலும் மக்கள் நீதி போட்டியிடும் கமல்ஹாசன் அறிவிப்பு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. இதனால் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியானது. மேலும் திமுக தலைவர் கருணாநிதி மறைவு மற்றும் அதிமுக எம்.எல்.எ போஸ் ஆகியோரின் மறைவால் தற்போது மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வரவிருக்கும் 20 தொகுதிகளுக்கான இடை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது,

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என தேதி குறிப்பிட்டு கூற முடியாது. ஆனால் இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டால் மக்கள் நீதி மய்யம் 20 தொகுதிகளிலும் போட்டியிடும்.

ஒர் ஊழலற்ற ஆட்சியால் மட்டுமே மக்களுக்கு நல்லாட்சியை தர முடியும். ஒர் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் உள்ள ஊழலை ஒழித்தால் மட்டும் போதும், அனைத்து துறைகளும் தானாகவே வளர்ச்சியின் பாதையில் செல்லும்.

நான் சுற்று பயணம் செல்லும் இடங்களில் மக்களுக்கு எந்த வாக்குறுதியையும் அளிப்பதில்லை. ஆனால் மக்கள் எனக்கு வாக்குறுதி அளிக்கின்றனர். இனி நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிக்க மாட்டோம் என உறுதி அளிக்கின்றனர்.

தற்போதைய அரசு மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஊழல் செய்வதிலே குறியாக உள்ளது என ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் இலங்கையில் தற்போதைய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் கமல்ஹாசன்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.