எங்களை விட்டுடுங்க! கதறும் நிர்மலா தேவி!

எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளை பாலியல் உறவுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் மதுரையில் உள்ள மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும்., எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் அளித்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.