தனி மனிதரால் நாடு அழிந்துவிட்டது | ட்விட்டரில் பொறிந்த மு.க.ஸ்டாலின்.

நாட்டின் அழிவுக்கு ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பண மதிப்பிழப்பு பேரிடரே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின்போது கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்கிற நோக்குடன் ரூ.500 ரூ.1000 ஆயிரம் ருபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நவம்பர் 8-ஆம் தேதி இரவு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் பண மதிப்பு இழப்பின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்கு தள்ளிய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று.

வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதோடு, சிறு – குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது. நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்.

இவர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.