தருமபுரி மாணவி விவகாரம் | மரண தண்டனை வழங்க வேண்டும் | விஜயகாந்த் அதிரடி!தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நபர்களை தூக்கிலிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்டம்அரூர் அருகேகடந்தஇரு தினங்களுக்குமுன் இரவு, பிளஸ்டு மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போதுஅவரைசில நபர்கள்பின்தொடர்ந்துசென்று பாலியல் வன்கொடுமை செய்யமுயன்றுள்ளனர்.அவர்களிடமிருந்துதப்பிக்கப் போராடிய மாணவியைகடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்துதப்பிச் சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசதீஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 17வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நபர்களை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கு மரணம் தான் சிறந்த தண்டனை என்று கூறியுள்ளார்.

20 தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து தேமுதிக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு இன்று நடைபெற்றது கூட்டத்தை தலைமையேற்று பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: