பட்டேல் சிலை தேவையா? பிரகாஷ்ராஜ் பேச்சுக்கு தமிழிசை பதிலடி!

மனிதனின் உயரம் அவர் வாழ்ந்த வாழ்க்கையில் இருக்கவேண்டுமே தவிர 3,000 கோடி ருபாய் செலவில் இல்லை என நடிகர் பிரகாஷ்ராஜ், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உருவாக்கப்பட்ட சிலை குறித்து விமர்சித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் “3,000 கோடி செலவு செய்து பட்டேலுக்கு சிலை அமைத்துள்ளது எந்த வகையில் Statue Of Unity ஆகும். ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையின் உயரம் அவர் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர, சிலையில் இல்லை. பட்டேலின் இந்த சிலை இன்று நமது நாட்டிற்கு தேவையா? என்று விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி தந்துள்ளார். அவர் கூறியதாவது.,

“மரியாதைக்குரிய பட்டேல் அவர்களின் தியாகமோ, இன்று நாடு ஒற்றுமையாக இருக்க காரணம் பட்டேல் என்பதோ, பிரகாஸ்ராஜிற்கு தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் திரைக்கதை தெரிந்திருக்கின்ற அளவிற்கு சுதந்திர நாட்டின் கதை தெரியுமா, என்பது எனக்கு தெரியவில்லை. ஆக பட்டேல் அவர்களின் தியாகம் பற்றி தெரியாமல் பிரகாஷ்ராஜ் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: