முதல் போட்டியிலே கோலியை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த தவான்

ஆஸ்ரேலியாவுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள், மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் 16.1வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் 20 ஓவர் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன் படி முதலில் பேட் செய்த ஆஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது. பின் டக்வொர்த் லூயிஸ் விதியின் படி 174 ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பின் 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ரோகித் ஷர்மா, கோலி, ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய தவான் 42 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 76 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஷிகர் தவான் இந்த ஆண்டில் மட்டும் 16 டி20 போட்டியில் விளையாடி 648 ரன்களை குவித்துள்ளார்

இதன் மூலம் ஒரு வருடத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் பட்டியலில் இதுவரை முதல் இடத்தில் இருந்த விராட் கோலியை (641 ரன்கள்) பின்னுக்கு தள்ளி ஷிகர் தவான் (648 ரன்கள்) முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் ஃபக்கர் சமான், ரோகித் சர்மா ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: