இந்தியாவுக்கு நடந்த அநீதி தட்டி கேட்ட விராட் கோலி பாராட்டும் பிரபலம்

கிரிக்கெட் மைதானத்தில் எப்போதும் ஆக்ரோசமாக இருப்பவர் விராட் கோலி. அதுவும் தன்னை யாரும் சீண்டினாலோ, இந்திய அணிக்கு எதிராக அநீதி நடந்தாலோ பொங்கி எழுந்து விடுவார். இவரின் இது போன்ற ஆக்ரோசமான செயல்பாடுகளால் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வார்.

ஆனால் இன்று அது போன்று இல்லாமல் இந்திய அணியின் நன்மைக்காக அம்பயரிடம் அதிக நேரம் வாதிட்டு ரசிகர்களின் பாராட்டையும், ஆஸ்ரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்ரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்தது. போட்டியை கட்டாயமாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சால் ஆஸ்ரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. இதனால் அந்த அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து கன மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த போட்டியின் 19 வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வீசும் போது கன மழை கொட்ட துவங்கியது. மழையை பொருட்படுத்தாத அம்பயர் 19வது ஓலர் முடிந்ததும் போட்டியை நிறுத்தலாம் எனக் கூறி தொடர்ந்து போட்டியை நடத்தினார்.

கனமழை பெய்யும் போது பேட்டிங் செய்யும் பிட்சை தார்பாய் கொண்டு மூடாவிட்டால், பிட்சில் மழை நீர் புகுந்து ஈரப்பதம் ஏற்பட்டுவிடும். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். இதன் பின் இந்திய அணியால் சிறிய இலக்கை கூட எளிதில் சேஸ் செய்து வெற்றி பெற முடியாது.

இந்த காரணத்தால் அம்பயரின் முடிவில் அதிருப்தி அடைந்தார் லிராட் கோலி. உடனே அம்பயரிடம் சென்று சிறிது நேரம் பேசிய அவர், தனது கருத்தை கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த அம்பயர் 19வது ஓவர் முடிவிலே போட்டியை நிறுத்தினார்.

போட்டி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்ரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், விராட் கோலி அம்பயரிடம் பேசியது தவறில்லை மிகச் சரியே என தனது ஆதரவை அளித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: