அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா?! அம்மாடியோவ் இவ்வளவு பிரமாண்டமா!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஆனந்த் பிரேமால் ஆகியோரின் திருமணம் வரும் டிசம்பர் 12-ல் மும்பையில் நடக்க உள்ளது.

இதற்கு முன்னதாக 8,9-ம் தேதிகளில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்காக விசேஷ நிகழ்ச்சிகள் உதைப்பூரில் நடக்கவுள்ளது.இந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் செல்வதற்காக விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல போர்ஸ், ஜாகுவார், ஆடி, பென்ஸ், பி.எம்.டபிள்யூ., உட்பட் 1000க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள், நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அம்பானியின் விருந்தினர்களாக உள்ளதால், அப்பகுதியில் உள்ள 5 ஸடார் ஹோட்டல்கள் அனைத்தும் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளன. தவிர, உதைப்பூர் விமானநிலையத்தில் இவருக்காக 22 தனிவிமானங்கள் நிறுத்த சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனால் சிறப்பு விமானங்கள் மட்டும் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்கள் தரையிறங்கியதும், பயணிகளை இறக்கிவிட்டு விட்டு உடனடியாக திரும்பி அனுப்பப்படுகிறது.

இதற்கு இடையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 7-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது இதனால் உதைப்பூர் விமான நிலையமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.தினமும் குறைந்த பட்சமாக 30 முதல் 50 தனியார் விமானங்கள் அங்கு வந்த வண்ணம் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: