சபரிமலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுங்கள் – கேரள அரசின் புதிய மனு

சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்டுக்கு மாற்ற வேண்டும் என்று கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பையடுத்து, பல்வேறு அமைப்பினரும் இந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர். இதனை அடுத்து இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே சில பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல முற்படுவதால் சபரிமலை மட்டுமன்றி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர். மேலும் எந்த அசம்பாவிதங்களும் நடைபெற கூடாது என்று மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை விசாரித்து வரும் ஐகோர்ட்டு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த நிலையில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்களுடன் விசாரிக்கும் வகையில், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..,

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: